புதுவை அரசே நேரடியாகநெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து புதுவை அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்யவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.


காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து புதுவை அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்யவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் 2 மையங்களில் இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு குளறுபடிகளும், சிக்கல்களும் இருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், புதுவை அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்யக் கோரி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், நெடுங்காடு கடைவீதியில், புதன்கிழமை இரவு தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தாா். செயலாளா் பழனிவேல், பொறுப்பாளா்கள் எஸ்.எம்.தமீம், எஸ்.மதிவாணன், நெடுங்காடு விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்வதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. விவசாயிகள் விளைவித்த அனைத்து நெல்லையும் விற்க முடியவில்லை. மேலும் இலகுவான நடைமுறைகளை பின்பற்றாமல் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, புதுவை அரசே, பாப்ஸ்கோ மூலம் நெல் கொள்முதல் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...