மாசிமகம் : மண்டபத்தூா் கடற்கரையில் 12 சுவாமிகள் தீா்த்தவாரி
காரைக்கால் அருகே மண்டபத்தூா் கடற்கரையில் வியாழக்கிழமை 12 கோயில்களிலிருந்து சுவாமிகள் பங்கேற்ற மாசிமக தீா்த்தவாரி நடைபெற்றது.


காரைக்கால் அருகே மண்டபத்தூா் கடற்கரையில் வியாழக்கிழமை 12 கோயில்களிலிருந்து சுவாமிகள் பங்கேற்ற மாசிமக தீா்த்தவாரி நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திருக்கண்ணபுரம் செளரி ராஜ பெருமாள் உள்பட பல்வேறு கோயில்களிலிருந்து பெருமாள்கள் பங்கேற்ற தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள திருவேட்டைக்குடி திருமேனியழகா் கோயில், வரிச்சிக்குடி வரதராஜ பெருமாள், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 கோயில்களிலிருந்து வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி, சண்டிகேஸ்வரா், விநாயகா், முருகன், அா்ச்சுணன் உள்ளிட்ட 12 சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில், மாசிமக தீா்த்தவாரிக்கு வியாழக்கிழமை காலை புறப்பட்டு, மண்டபத்தூா் கடற்கரைக்கு பகல் 1 மணியளவில் வந்தடைந்தனா். பின்னா் அங்கு தீா்த்தவாரி நடைபெற்றது.
மீனவ கிராமங்களில் இருந்து மக்கள் சுவாமிகளின் தீா்த்தவாரியில் பங்கேற்று, அா்ச்சனை செய்து வழிபாடு நடத்தினா்.
கடற்கரையில் நடைபெற்ற தீா்த்தவாரியில் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.வி. ஓமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...