காரைக்கால்: ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டுக்குப் பின் புதுவை முதல்வர் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை காரைக்கால் வந்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. நாளடைவில் அதிகரித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கும் நிலை உருவானது. பரிசோதனையில் சிலருக்கு காலரா உறுதிப்படுத்தப்பட்டது. பெரும்பான்மையினர் ஒரு நாள் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இப்பிரச்னையையொட்டி புதுவை சுகாதாரத் துறை பொது சுகாதார அவசர நிலை பகுதியாக காரைக்காலை அண்மையில் அறிவித்தது.
இந்த சூழலிலும் புதுவை முதல்வர் என்.ரங்கசாமி காரைக்காலுக்கு வந்து ஆய்வு செய்யவில்லை. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முன்வரவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் முதல்வர் என்.ரங்கசாமி காரைக்காலுக்கு 11.15 மணியளவில் வந்தார். பூவம் பகுதி மாவட்ட எல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் ஆர்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர்.
காரைக்கால் நகரப் பகுதியில் திருநள்ளாறு சாலையில் உள்ள மத்திய மண்டல குடிநீர் தேக்கத் தொட்டியை முதல்வர் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர் உள்ளிட்ட அதிகாரிகள், தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதையும், குடிநீர் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணி, குளோரின் கலப்புப் பணிகள், குடிநீர் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் கசிவுகளை சீரமைத்தல் என மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.
இதைத் தொடர்ந்து அரசு பொது மருத்துவமனைக்கு ஆய்வுப் பணி, மாவட்ட ஆட்சியரகத்தில் பல்வேறு அரசுத்துறையினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

ஃபிஃபா உலகக் கோப்பை: முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தேர்வான மெக்சிகோ!

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



