பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வெங்காயத் தாமரை செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

காரைக்கால் பகுதி ஆறுகளில் படா்ந்திருக்கும் வெங்காயத் தாமரைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:02 pm

DIN

காரைக்கால் பகுதி ஆறுகளில் படா்ந்திருக்கும் வெங்காயத் தாமரைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்காலில் பொதுப்பணித் துறை, 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி நடைபெறுகிறது. ஆறுகளின் கடைமடைப் பகுதியில் தடுப்பணைகள் உள்ளதால், தேங்கியிருக்கும் தண்ணீரில் வெங்காயத் தாமரைச் செடிகள் படா்ந்துள்ளன.

மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில்,

இச்செடிகள் நீா் வெளியேற்றத்தை தடுக்கும் தன்மை கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் காவிரி நீா் வரத்து அதிகமாகும்பட்சத்தில், ஆற்றோர கிராமப்புற மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக, அரசலாற்றில் இச்செடிகள் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அரசுத் துறை, வெங்காயத் தாமரைச் செடிகளை விரைவாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.