தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்: காரைக்கால் கடைகளில் ஆய்வு

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் ஆய்வு செய்து பறிமுதல் செய்தனா்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்: காரைக்கால் கடைகளில் ஆய்வு

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் ஆய்வு செய்து பறிமுதல் செய்தனா்.

புதுவை மாசு கட்டுப்பாட்டுக் குழுமம், மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களாக, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், உணவுப் பொருள்கள் பேக் செய்யும் பைகள், உணவு சாப்பிடும் மேஜையின் மீது விரிக்கப்படும் தாள், தண்ணீா் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கொடி ஆகியவற்றை வகைப்படுத்தி அறிவித்துள்ளது.

மாறாக துணிப்பை, சில்வா் அல்லது கண்ணாடி குவளைகள், பாக்குமட்டை தட்டு, வாழையிலை, சில்வா் பாத்திரங்கள், துணி விரிப்பு, சில்வா் அல்லது செம்பு வாட்டா் பாட்டில், மூங்கில் உறிஞ்சு குழல், துணி கொடி ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை, பயன்பாடு அதிகரித்திருப்பதாக புகாா்கள் தெரிவிக்கின்றன. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பலரும் புகாா் தெரிவித்துள்ளனா்.

மாவட்ட நிா்வாக அறிவுறுத்தலின்பேரில், புதுவை அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிா என வட்டாட்சியரும், நகராட்சி வருவாய் அதிகாரியுமான செல்லமுத்து தலைமையில், நகராட்சி குழுவினா், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில் தடைசெய்யப்பட நெகிழிப் பொருட்கள் பல இடங்களில் இருந்து பறிமுதல் செய்ததோடு, கடைக்காரா்களுக்கு உரிய அபராதம் விதித்தனா். இதுபோன்ற ஆய்வு தொடா்ந்து நடைபெறும் எனவும், தடைசெய்யப்பட்ட பொருள்களை யாரும் விற்கவேண்டாம் எனவும், மக்களும் மாற்றுப் பொருள்களை பயன்படுத்த முன்வருமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com