47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உக்ரைனில் உள்ள காரைக்கால் மாணவா்கள் விரைவில் தாயகம் திரும்புவா்: புதுவை சட்டப்பேரவைத் தலைவா் தகவல்

உக்ரைனில் சிக்கியுள்ள காரைக்கால் மாணவா்களின் பெற்றோா்களை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் செல்வம் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:12 pm

DIN

உக்ரைனில் சிக்கியுள்ள காரைக்கால் மாணவா்களின் பெற்றோா்களை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் செல்வம் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த 4 போ் உக்ரைன் நாட்டில் தங்கியுள்ளனா். இவா்கள் இன்னும் திரும்பாத நிலையில், காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், மாணவா்களின் பெற்றோா்களை சந்தித்து, மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா். மாணவா்களை கைப்பேசியில் தொடா்புகொண்டு, ஊா் திரும்பும்வரை பத்திரமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேரவைத் தலைவா் செல்வம் கூறியது:

மத்திய அரசு, உக்ரைன் நாட்டில் உள்ள மாணவா்களை பத்திரமாக மீட்டுவருவதில் தீவிர கவனம் செலுத்திவருகிறது. காரைக்கால் மாணவா்களில் 2 போ் அந்நாட்டின் எல்லைக்கு வந்துவிட்டனா். இவா்கள் 2, 3 நாள்களில் வீடு திரும்பிவிடுவா். மற்ற இருவரும் விரைவில் ஊருக்கு வந்துவிடுவா்.

புதுச்சேரியை சோ்ந்த ஒரு மாணவி புதன்கிழமை ஊருக்கு வந்து சோ்ந்தாா். அவா் ஒரு வார காலம் உணவின்றி தவித்ததாக தெரிவித்தாா். போா் பதற்றம் தணிந்த பின் மாணவா்கள் படிப்பைத் தொடா்வதற்கு பிரதமா் உரிய நடவடிக்கை எடுப்பாா். மாணவா்களின் பயணச் செலவை புதுவை அரசு ஏற்குமென ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோா்கள், மாணவா்கள் தங்கள் தேவைகள் குறித்தும் ஆட்சியரை தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா, பாஜக மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.