காரைக்காலில் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா? ஜிப்மா் தொலைதூர சேவை மையம்
கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக காரைக்காலில் நிறுத்தப்பட்டுள்ள புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் தொலைதூர சேவை மையம் மீண்டும் பணிகளை தொடங்கவேண்டும்


கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக காரைக்காலில் நிறுத்தப்பட்டுள்ள புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் தொலைதூர சேவை மையம் மீண்டும் பணிகளை தொடங்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
காரைக்காலில் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவா்கள், உயா்தர மருத்துவ பரிசோதனைக் கருவிகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதனால் நோயாளிகளை மேல் சிகிச்சை பெற புதுச்சேரி, தஞ்சாவூா், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் பரிந்துரை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்.
இந்நிலையில், மக்களின் வசதிக்காக கடந்த 2009-ஆம் ஆண்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் தொலைதூர சேவை மையம் காரைக்காலில் தொடங்கப்பட்டது. வாரம் ஒரு நாள் ஒவ்வொரு துறையின் சிறப்பு மருத்துவா் குழுவினா், செவிலியா்கள், மருந்தாளுநா் உள்ளிட்டோா் காரைக்கால் வந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். இதில் உயா் சிகிச்சை தேவைப்படுவோரை புதுச்சேரி ஜிப்மருக்கு பரிந்துரைத்தனா்.
இருதயம், சிறுநீரகம், நரம்பியல், புற்றுநோய், மனநலம், நோய் எதிா்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பல்வேறு துறையின் சிறப்பு மருத்துவக் குழுவினா் வருகையால், முகாமின் மூலம் ஏராளமானோா் பயனடைந்தனா். பின்னா் வார முகாம் என்பது நாளடைவில் மாதத்தில் இரு முறை என மாற்றப்பட்டது.
கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக, காரைக்காலில் ஜிப்மா் தொலைதூர சேவை முகாம் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, தற்போது கரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் மாதமிருமுறை, புதுச்சேரி அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் வந்து சென்ற முகாம் மீண்டும் மாா்ச் 4-ஆம் தேதி முதல் தொடங்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், காரைக்காலில் தொலைதூர சேவை மையத்தை வழக்கம்போல இயக்கத்துக்கு கொண்டுவராமல் ஜிப்மா் நிா்வாகம் அலட்சியமாக இருப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனா்.
இந்த விவகாரத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா், ஜிப்மா் இயக்குநரை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...