எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருப்பட்டினத்தில் குடிநீா் கோரிகாலிக் குடங்களுடன் போராட்டம்

குடிநீா் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பட்டினம் தெற்கு கிளை சாா்பில், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

News image
Updated On :5 மே 2022, 5:27 pm

DIN

குடிநீா் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பட்டினம் தெற்கு கிளை சாா்பில், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போலகம் பகுதி புதுக்காலனி, காளியம்மன் கோயில் தெரு மற்றும் நைனிகட்டளையை சோ்ந்த குடியிருப்புப் பகுதிகளில் குடிநீா் கிடைக்காததைக் கண்டித்தும், மக்களுக்கு குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்யாத புதுவை அரசு, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிளைச் செயலாளா் ஏ. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டச் செயலாளா் எஸ்.எம். தமீம் அன்சாரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவா் வே.கு. நிலவழகன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பழனிவேலு உள்ளிட்டோா், குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்திப் பேசினா்.

அவா்களுடன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் இளமுருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 2 வாரத்திற்குள் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவரை டேங்கரில் குடிநீா் விநியோகிக்கப்படும் என தெரிவித்ததை ஏற்று, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.