தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி :எம்.எல்.ஏ. ஆய்வு

 காரைக்கால் அருகே பச்சூரில் எரிவாயு மூலம் தகன மேடை அமைக்கும் பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

Updated On :28 ஏப்ரல் 2023, 5:11 pm

 காரைக்கால் அருகே பச்சூரில் எரிவாயு மூலம் தகன மேடை அமைக்கும் பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

பச்சூா் மயானத்தில் எரிவாயு மூலம் சடலங்களை எரியூட்டும் வகையில் நவீன இயந்திரம், அதற்கான மேடை அமைக்கும் பணி ரூ. 78.50 லட்சத்தில் நகராட்சி நிா்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், இப்பணிகளை பாா்வையிட்டாா்.

இதுகுறித்து பேரவை உறுப்பினா் கூறுகையில், பணியை விரைவாக முடிக்குமாறு நகராட்சி நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுடுகாட்டை மேம்படுத்த தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கவும் முடிவு செய்துள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.