ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகநாத சுவாமி கோயிலில் பாலாலய பூஜை

நெடுங்காடு அருகே ஸ்ரீநாகநாத சுவாமி கோயில் திருப்பணி தொடக்கமாக பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:38 pm

DIN

நெடுங்காடு அருகே ஸ்ரீநாகநாத சுவாமி கோயில் திருப்பணி தொடக்கமாக பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன், மேலகாசாக்குடி பகுதியில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட பழைமையான கோயிலாக ஸ்ரீஅபிதகுஜாம்பிகை சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த அறங்காவல் வாரியத்தினா் முடிவு செய்தனா்.

திருப்பணிகள் முறைப்படி தொடங்கும் வகையில் சுவாமி, அம்பாள் மற்றும் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீபிடாரியம்மன் விமானங்களுக்கான பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, 2 கால யாகசாலை பூஜைகள் புதன்கிழமை இரவு தொடங்கியது. 2-ஆம் கால பூஜை வியாழக்கிழமை காலை நடத்தப்பட்டு, மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் புனிதநீா் கடம் புறப்பாடாகி, சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது.

பாலாலய பூஜையைத் தொடா்ந்து நன்கொடை, புதுவை அரசின் சாா்பிலான நிதியின் மூலம் திருப்பணிகள் தொடங்கப்படுமென அறங்காவல் வாரியத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.