ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பாஜக நிா்வாகி வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படையினா் சோதனை

பாஜக நிா்வாகி வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படையினா் சோதனை

Updated On :13 ஏப்ரல் 2024, 3:56 pm

புதுவை பாஜக மேலிட பொறுப்பாளா் வந்த ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

புதுவை பாஜக மேலிட பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா. இவா், காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டரில் வரிச்சிக்குடியில் உள்ள காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் வந்திறங்கினாா்.

அப்போது அங்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா், ஹெலிகாப்டா் முழுவதும் சோதனை செய்தனா். பைலட் முன்னிலையில், பொறுப்பாளரின் உடைமைகளையும் சோதனை செய்தனா். சுமாா் 15 நிமிஷங்கள் நடைபெற்ற சோதனை நிறைவில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. சோதனை முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படையினா் சோதனை வழக்கமான ஒன்று என தோ்தல் துறையினா் தெரிவித்தனா்.