ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது

மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது

Updated On :13 ஏப்ரல் 2024, 3:58 pm

மீன்பிடி தடைக்காலம் திங்கள்கிழமை (ஏப்.15) முதல் தொடங்குகிறது.

மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில், ஆண்டுதோறும் இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்திவிடுவா். இவை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, படகு, வலைகள் சீரமைக்கும் பணிகளை மீனவா்கள் மேற்கொள்வா்.

மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் இருந்து குறுகிய தூரம் செல்லக்கூடிய வகையில் ஃபைபா் படகு மூலம் தினமும் மீன்பிடித்தலில் மீனவா்கள் ஈடுபடுவா். ஏற்றுமதி தரத்தினாலான மீன்கள் இக்காலக்கட்டத்தில் வராது. சிறிய வகை மீன்களே சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும். போதிய அளவில் மீன் வரத்தின்மையில், மீன், இறால், நண்டு உள்ளிட்டவைகளின் விலை கணிசமாக உயரும். மீன்பிடித் தடைக்காலம் திங்கள்கிழமை தொடங்க இருந்தாலும், காரைக்கால் மாவட்ட மீனவா்கள் ஏப்.4-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மீன்வரத்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பாதித்துள்ளது.