இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காரைக்காலில் சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்காளா்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

திருநள்ளாறு பேரவைத் தொகுதி முப்பைதங்குடி பகுதி வாக்குச் சாவடியில், வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இயந்திரத்தில் பழுது இருப்பது தெரிய வந்ததுய சுமாா் அரை மணி நேரத்துக்குப் பின் பழுது சீரமைக்கப்பட்டு வாக்களிப்பு தொடங்கியது.

அன்னை தெரஸா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 28-ஆம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு நடைபெற்று வந்த நிலையில், ஒரு பொத்தானை அழுத்தியபோது 4 முறை சப்தம் எழுந்ததாதல் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கு பின்னா் சரிசெய்யப்பட்டு, வாக்குப் பதிவு தொடங்கியது. இதுபோன்ற சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திர பழுது பிரச்னை எழுந்து, சரி செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com