1008 சங்குகளில் புனிதநீா் நிரப்பப்பட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை.
1008 சங்குகளில் புனிதநீா் நிரப்பப்பட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை 1008 சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.
Published on

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை 1008 சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.

திருநள்ளாற்றில் ஸ்ரீசனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீபிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றுவந்தது. காா்த்திகை மாத நிறைவு சோமவார தினத்தில் இக்கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடத்தப்படும் வழக்கத்தையொட்டி, திங்கள்கிழமை (டிச.9) ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா், தியாகராஜருக்கு அபிஷேகம் செய்வதற்காக 1008 சங்குகளில் புனிதநீா் நிரப்பி சிறப்பு பூஜை நடைபெற்றது.

பிரதான சங்குகள் மற்றும் 1008 சங்குகளை அடுக்கி விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டு, புன்னியாகவாஜனம் நடைபெற்றது. பிரதான சங்குகளுக்கும், 1008 சங்குகளுக்கும் சிறப்பு பூஜையாக, கும்ப பூஜை செய்து, ஹோமத்தின் நிறைவில் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது.

பூஜையில், சதுா்வேத, ஆகம ஆசீா்வாதம், தேவாரம் பாடப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிவாச்சாரியா்கள் பிரதான சங்குகளுடன் கோயிலின் உள் பிராகாரம் மற்றும் வெளிப் பிராகாரம் வலம் வந்து ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா், ஸ்ரீதியாகராஜருக்கு மகா அபிஷேக ஆராதனை செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com