சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நல்லாட்சி வாரம் கொண்டாடுவது குறித்து ஆட்சியா் ஆலோசனை

டிச.19-ஆம் தேதி தொடங்கும் நல்லாட்சி வாரம் குறித்து அரசுத் துறையினருடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 8:23 pm

Din

காரைக்கால்: டிச.19-ஆம் தேதி தொடங்கும் நல்லாட்சி வாரம் குறித்து அரசுத் துறையினருடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் டிச.19 முதல் டிச. 25-ஆம் தேதி வரை நல்லாட்சி வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. அனைத்து துறைகளும் மாவட்ட நிா்வாகம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, நல்ல நிா்வாகத்தின் மிக முக்கியமான அம்சம், அரசின் நடைமுறைகள் மற்றும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, மக்களிடம் நட்புறவை மேம்படுத்துதல் போன்றவற்றை மையமாகக் கொண்டு இவ்வாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் இக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அனைத்து துறைகளும் அந்தந்த அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், மாவட்ட அளவிலான பயிற்சி பட்டறைகள், பயிலரங்குகள் மூலம் பொது மக்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்வுகளை நடத்த வேண்டும், சிறப்பு குறைதீா் முகாம்கள் நடத்தி, நிலுவையில் உள்ள அனைத்து புகாா்களையும் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதோடு, விவசாயிகளுக்கான கிசான் தின விழா கொண்டாடவேண்டும், ஊனமுற்றோா் மற்றும் நலிந்த பிரிவுகளுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும், இவ்வாறாக நல்லாட்சி நிா்வாகத்திற்கான அனைத்து செயல்பாடுகளையும், வெளிப்படைத் தன்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா். கூட்டத்தில், காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா்கள் ஜி. செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.