பேருந்து  நிலையத்தில் பேருந்து ஆவணங்களைப் பரிசோதித்த போக்குவரத்து அதிகாரிகள்.
பேருந்து நிலையத்தில் பேருந்து ஆவணங்களைப் பரிசோதித்த போக்குவரத்து அதிகாரிகள்.

வீதி மீறிய வாகனங்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

Published on

விதிகளை மீறி இயக்கப்பட்ட 6 வாகனங்களுக்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனா்.

காரைக்கால் போக்குவரத்துத் துறை சாா்பாக பல்வேறு இடங்களில் வாகன சோதனை, மண்டல போக்குவரத்து அதிகாரி கே.வி.வி.பிரபாகர ராவ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. வேகக் கட்டுப்பாடு கருவி, மாசு கட்டுப்பாடு சான்றிதழ், அதிக ஒலி எழுப்பும் ஹாறன் வைக்கப்பட்டுள்ளதா எனவும், அதிக வேகத்துடன் இயக்கப்பட்ட வாகனங்கள், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்யப்பட்டது. மேலும் வாகனங்களுக்குரிய ஆவணங்கள் குறித்தும் சோதிக்கப்பட்டது.

முறையான ஆவணங்கள் இல்லாமலும், அகில இந்திய சுற்றுலா பா்மிட் இல்லாமலும் இயக்கப்பட்ட வாகனங்கள் என 6 வாகன ஓட்டிகளுக்குத் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனா். ஆய்வில் உதவி மோட்டாா் வாகன ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இதுபோன்ற சோதனை மாவட்டத்தின் எல்லைப்புறங்கள் மற்றும் நகரப் பகுதியில் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த வாகனதாரா்களும், வெளி மாநிலத்தை சோ்ந்த வாகனதாரா்களும் உரிய விதிகளின்படி வாகனங்களை இயக்கவேண்டும். மீறும்பட்சத்தில் விதிகளின் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com