ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை தேவை

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை தேவை

News image

மாவட்ட ஆட்சியா் ஜி. ஜான்சனை சந்தித்து கடிதம் அளித்த விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜகவினா்.

Updated On :14 ஜூன் 2024, 10:51 pm

Din

பயங்கரவாதிகள், அவா்களுக்கு ஆதரவளிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடியரசுத் தலைவருக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் காரைக்கால் மாவட்டத் தலைவா் கே.எஸ். விஜயன் தலைமையில், மாவட்ட பாஜக தலைவா் ஜி.கே முருகதாஸ், கேந்திர தலைவா் பி. வெங்கடாசலம், மாவட்ட சேவா பிரமுக் எம். சந்திரசேகா், நகர செயலாளா் ஜி. காா்த்திகேயன், காரை நகர சேவா பிரமுக் சபரிகிரீசன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் எம் செந்தில் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் (பொ) ஜி. ஜான்சனை வியாழக்கிழமை சந்தித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டிய கடிதத்தை அளித்தனா். அதில் கூறியிருப்பது: ஜம்மு-காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவகோத்ரி கோயிலில் இருந்து, கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்த இந்து யாத்ரீகா்கள் மீது, மனிதாபிமானமற்ற பாகிஸ்தானிய ஆதரவு இஸ்லாமிய ஜிகாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போ் கொல்லப்பட்டனா். இந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்களை தனிமைப்படுத்தி படுகொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்கும் நாளில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது ஒருமைப்பாட்டை தகா்க்கும் முயற்சியாகும். இதுபோன்ற சம்பவம் மேலும் நிகழாத வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் மற்றும் அவா்களுக்கு ஆதரவளிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.