காரைக்கால் கைலாசநாதா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் நடைபெற்றுவருகிறது. தினமும் மாலை வேளையில் சிறப்பு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி காலை 5 மணிக்கு பஞ்சமூா்த்திகள், அஸ்திரதேவா் அபிஷேகம் நடைபெறுகிறது. 7 மணிக்கு தேருக்கு பூஜைகள் நடைபெறவுள்ளன. 8.45 மணிக்கு தோ் வடம் பிடிக்கப்படுகிறது. தேரோட்டத்தையொட்டி தெருக்கள் சீரமைப்புப்பணி ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டுள்ளது. தேருக்கு இடையூறு இல்லாத வகையில் மரக்கிளைகள் அகற்றப்பட்டு சீரமைப்புப் பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சமயபுரம் தேரோட்டம் கோலாகலம்!
இந்த வாரம்.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

திருவானைக்காவலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


