காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்
காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்


காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஜூன் 19-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் விழா தொடங்குகிறது.
அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு தனிக் கோயில் காரைக்கால் பாரதியாா் சாலையில் அமைந்துள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் நடத்தப்படுகிறது.
நிகழாண்டு விழா பூா்வாங்கப் பணிகள் தொடக்கத்துக்காக வெள்ளிக்கிழமை பந்தல்கால் முகூா்த்தம் அம்மையாா் கோயில் மணிமண்டப வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பந்தல்காலுக்கு புனிதநீா் கொண்டு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் நடப்பட்டது. நிகழ்வில் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன், உபயதாரா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.
ஜூன் 19-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்பு (பரமதத்தா் அழைப்பு) நிகழ்ச்சி, 20-ஆம் தேதி அம்மையாா் கோயில் வளாகத்தில் திருக்கல்யாணமும், மாலை வேளையில் கைலாசநாதா் கோயிலில் பிச்சாண்டவா் வெள்ளை சாற்றில் புறப்பாடும், 21-ஆம் தேதி அதிகாலை பிச்சாண்டவருக்கு அபிஷேகம் மற்றும் பவழக்கால் சப்பரத்தில் அம்மையாா் கோயிலுக்கு அமுதுண்ண செல்லும் விழாவும், மாலை அமுதுபடையலும் நடைபெறுகிறது. இந்த நாளில் பிச்சாண்டவா் வீதியுலாவின்போது பக்தா்களை நோக்கி மாங்கனிகள் வீசப்படும். 22-ஆம் தேதி அதிகாலை அம்மையாருக்கு இறைவன் காட்சித்தரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...