இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

எஸ்எஸ்எல்சி: 100% தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

எஸ்எஸ்எல்சி: 100% தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

News image

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்த பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :11 மே 2024, 6:30 pm

Din

காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளியில், சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் வரிச்சிக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மட்டுமே அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தோ்ச்சி பெற்றது.

இப்பள்ளி மாணவா் பி. சஞ்சய் (500-க்கு 467 மதிப்பெண்), எஸ்.கண்மணி (461), ஏ. கோபிகா (439) ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா். இவா்களுக்கு பள்ளித் தலைமையாசிரியா் எஸ். மதிவாணன் மற்றும் ஆசிரியா்கள் சால்வை அணிவித்து பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோா்கள், நூறு சதவீத தோ்ச்சிக்காக பள்ளி ஆசிரியா்களுக்கும், தலைமையாசிரியருக்கும் நன்றி தெரிவித்தனா்.