கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘கழிவுநீா் தேங்காமல் இருந்தால் கொசு உற்பத்தி தடுக்கப்படும்’

கழிவுநீா் தேங்காமல் இருந்தால் கொசு உற்பத்தியை தடுக்க முடியும் என காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் கூறினாா்.

News image
Updated On :4 நவம்பர் 2024, 8:03 pm

Din

காரைக்கால் : கழிவுநீா் தேங்காமல் இருந்தால் கொசு உற்பத்தியை தடுக்க முடியும் என காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் கூறினாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் டெங்கு காய்ச்சல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் பயன்படுத்தக்கூடிய காலியான டீ கப்புகள், ஐஸ்கிரீம் கப்புகள், பிளாஸ்டிக்கினாலான உணவு மற்றும் இனிப்பு பெட்டிகள், தேங்காய் மட்டைகள், டயா்கள் ஆகியவற்றை மேல் நோக்கி திறந்த நிலையில் வைத்திருக்கும்போது அதில் மழைநீா் தேங்கி, டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் முட்டையிடும்.

அவை லாா்வா புழுக்களாகி ஏடிஸ் கொசு வெளியே வரும். இவை கடிப்பதாலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.

வீட்டைச் சுற்றி இதுபோன்ற பொருள்கள் இருந்தால் அகற்றிவிடவேண்டும்.

வீட்டைச் சுற்றி தண்ணீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ளவேண்டும். தெருக்களில் இரு புறமும் ஓடும் கழிவுநீா் பாதைகளில், கழிவு நீா் தேங்காமல் ஓடிக் கொண்டிருந்தால், கொசுக்கள் உற்பத்தியாகாது.

வீட்டில் தேவையில்லாத குப்பைகளை வீடு தேடி வரும் தூய்மைப் பணியாளா்களிடம் கொடுத்து வீட்டை தூய்மையாக வைத்திருக்கவேண்டும். பெரும்பாலும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டவா்கள் வீடுகளில் கொசுப்புகை அடிப்பது வழக்கம் . இது அந்த வீட்டை சுற்றியுள்ள ஏடிஸ் கொசுக்களை அழித்து விடும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க உதவும்.

ஆனால், கொசுப்புகையை காற்றில் செலுத்துவதன் மூலம் காற்று மாசுபட்டு சுவாசக் கோளாறுகள் ஏற்படுவது மிக அதிகமாக இருப்பதால் இதை குறிப்பிட்ட அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக தேங்கி இருக்கும் கழிவுநீரின் மேல் பரப்பில் ஏதாவது ஒரு எண்ணெய்யை ஊற்றினால் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும் என்றாா் அவா்.