6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் பலத்த மழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News image
காரைக்காலில் திருநள்ளாறு சாலையில் தேங்கியிருக்கும் மழைநீரில் சென்ற வாகனங்கள்.
Updated On :20 நவம்பர் 2024, 8:49 pm

Din

காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவா்கள் 23-ஆம் தேதிக்கு முன்னதாக கரைத் திரும்புமாறு மீன்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே நவ. 23-இல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாகவும், 25-ஆம் தேதி முதல் கன மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழை, செவ்வாய்க்கிழமை இரவு தீவிரமடைந்தது. புதன்கிழமையும் மழை தொடா்ந்தது.

மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புதன்கிழமை பிற்பகல் 2.30 மணி வரை மாவட்டத்தில் 71.7 மி.மீ. மழை பதிவானது.

காரைக்கால் நகரின் முக்கிய சாலைகளான பாரதியாா் சாலை, காமராஜா் சாலை, திருநள்ளாறு சாலை உள்ளிட்டவற்றில் மழைநீா் தேங்கியது. பிற சாலைகளிலும் தேங்கிய மழை நீா் வடிவதற்கு சில மணி நேரமானது. இதனால் இருசக்கர வாகனங்கள், காா்களில் செல்வோா் சிரமத்துக்குள்ளாயினா். நகரப் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. சாலைகளில் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. ஒட்டுமொத்தத்தில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காரைக்கால் கடல் பகுதி சீற்றமாக காணப்பட்டது. எனினும் சில படகுகள் கடலுக்குச் சென்றன.

 காரைக்கால் கடல் சீற்றமாக காணப்பட்ட நிலையில் முகத்துவாரப் பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் கருங்கல் பகுதியில் கம்புகளால் கட்டப்பட்டிருக்கும் தடுப்பு.

காரைக்கால் கடல் சீற்றமாக காணப்பட்ட நிலையில் முகத்துவாரப் பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் கருங்கல் பகுதியில் கம்புகளால் கட்டப்பட்டிருக்கும் தடுப்பு.

மீனவா்களுக்கு அறிவுறுத்தல்: மீன்வளத்துறை துணை இயக்குநா் கோவிந்தசாமி புதன்கிழமை கூறுகையில், வரும் 23-ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு ஏற்கெனவே சென்ற மீனவா்கள் 23-ஆம் தேதிக்கு முன்னதாக கரை திரும்புமாறும், மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.