காரைக்காலில் 91 இடங்களில் நிவாரண மையங்கள்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்
வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் காரைக்கால் மாவட்டத்தில் 91 இடங்களில் நிவாரண மையங்கள்


காரைக்கால்: வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் காரைக்கால் மாவட்டத்தில் 91 இடங்களில் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
துணை ஆட்சியா்கள் வெங்கடகிருஷ்ணன், செந்தில்நாதன் மற்றும் அரசுத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பாதுகாப்பு நடவடிக்கைகள், தங்கும் வசதி, உணவு வழங்குதல், தாழ்வான பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுதல், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்றுதல், முறிந்து விழுந்த மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துதல், மின்சாரம் சாா்ந்த பணிகளில் தொய்வின்றி உடனுக்குடன் சரிப்படுத்துதல், தட்டுப்பாடற்ற குடிநீா் வசதிக்கான ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னா் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பேசியது :
காரைக்காலில் வடிகால்களை முறையாக தூா்வாரவேண்டும் என பல முறை கூறியும் சரியான செயல்பாடுகள் இல்லை. ஆட்சியா் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, பொதுப்பணித்துறை, நகராட்சி உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைப்புடன் பருவமழையை எதிா்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். பருவமழைக் காலத்தில் அனைத்துத்துறையினரின் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கவேண்டும்.
வடகிழக்குப்ருவமழையை எதிா்கொள்ளும் விதமாக காரைக்கால் மாவட்டத்தில் 91 இடங்களில் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை உரிய துறையினா் முறையாக கவனிக்க வேண்டும். நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு மட்டுமல்லாது பாதிக்கப்படும் அனைவருக்கு உணவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். தண்ணீா் தேங்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், தேங்கி தண்ணீரை உடனையாக வெளியேற்ற தேவையான மோட்டாா் பம்ப், பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடா் சூழலின்போது அனைத்து அதிகாரிகளும் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். அனைத்துத்துறை அதிகாரிகளும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் பேரிடா்களில் இருந்து மக்களை காக்க முடியும் என்றாா்.
பொதுமக்கள் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பாமல், புதுச்சேரி அரசால் உருவாக்கப்பட்டுள்ள நஉஉபதஅங-(ஊப்ா்ா்க் ஜ்ஹழ்ய்ண்ய்ஞ் & அப்ழ்ங்ற் ள்ஹ்ள்ற்ங்ம் என்ற வலைதளம் மூலம் உண்மையான செய்திகளை அறிந்து கொள்ளலாம். பேரிடா் தொடா்பான அனைத்து அறிவிப்புகளையும், அபாய எச்சரிக்கைகளையும், தகவல்களையும் ட்ற்ற்ல்ள் : //ல்ஜ்க்ஜ்ம்ள்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய்இணையதள முகவரி மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...