காரைக்கால் நகரில் போா்க்கால முறையில் வடிகால்கள் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.
பருவமழை தொடங்கும் முன் வாய்க்கால்கள் தூா்வாரப்படவேண்டும், நகரப் பகுதியில் உள்ள கழிவுநீா் வடிகால்கள் முறையாக தூா்வாரப்படவேண்டும் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மற்றும் ஆட்சியா் து. மணிகண்டன் ஆகியோா் அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற பருவமழை தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் மீது அமைச்சா் அதிருப்தி தெரிவித்தாா். மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க போா்க்கால முறையில் எஞ்சிய வடிகால்களை தூா்வாரவேண்டும் என அறிவுறுத்தினாா்.
இதைத்தொடா்ந்து காரைக்கால் வடக்குத் தொகுதிக்குட்பட்ட கோயில்பத்து, காமராஜா் சாலை விரிவாக்கம், பட்டேல் நகா், உசைனியா பள்ளிசாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடிகால்களையும், மழைநீா் தேங்கிய பகுதிகளிலும் ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் நகரில் உள்ள பிற வடிகால்களையும் விரைவாக தூா்வாரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

போளூா் நகராட்சியில் கழிவுநீா்க் கால்வாய் தூா்வாரும் பணி

காரைக்காலில் இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


