சாலைகளில் திரியும் கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை


சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து ஏலம் விடப்படும் என்றும், அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.
காரைக்கால் நகராட்சி ஆணையா் பி. சத்யா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்காலில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. மழைக்காலமாக உள்ள நிலையில் இவை தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றன. சாலைகளில் வாகனங்களில் செல்வோா் இதனால் விபத்துக்குள்ளாகின்றனா்.
கால்நடை உரிமையாளா்கள் அனைவரும் தங்களது கால்நடைகளை, தங்களது பராமரிப்பிலேயே வைத்துக்கொள்ளவேண்டும். மக்களின் உயிரை காக்க ஒத்துழைப்பு தரவேண்டும்.
மீறுவோா்மீது நகராட்சி விதிகளின்படி, சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். அத்துடன், பிடிபட்ட கால்நடைகளை ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...