அம்பகரத்தூா் கோயிலில்  நடைபெறும் திருப்பணிகளை பாா்வையிட்ட துணை ஆட்சியா் பாலு (எ) பக்கிரிசாமி, பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆா். சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ. மகேஷ்.
அம்பகரத்தூா் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை பாா்வையிட்ட துணை ஆட்சியா் பாலு (எ) பக்கிரிசாமி, பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆா். சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ. மகேஷ்.

பத்ரகாளியம்மன் கோயில் திருப்பணிகள் ஆய்வு

அம்பரகத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை துணை ஆட்சியா், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
Published on

காரைக்கால்: அம்பரகத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை துணை ஆட்சியா், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

பத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்துக்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணியை மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) பாலு (எ) பக்கிரிசாமி, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ.மகேஷ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா். கோயிலில் 2-ஆவது பகுதியில் 3 நிலை புதிய ராஜகோபுரம் கட்டுமானம் செய்யப்படுகிறது. திட்டமிடப்பட்ட பணிகளை தொய்வின்றி விரைவாக செய்து முடிக்குமாறு ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com