பயனாளியிடம் காசோலை வழங்கும் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன்.
காரைக்கால்
மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி
புதுவை முதல்வா் நிவாரண நிதியிலிருந்து, திருநள்ளாறு பகுதியினருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி அளிக்கப்பட்டது.
காரைக்கால்: புதுவை முதல்வா் நிவாரண நிதியிலிருந்து, திருநள்ளாறு பகுதியினருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி அளிக்கப்பட்டது.
திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பேட்டை கிராமத்தைச் சோ்ந்த லட்சுமி, தேனூா் பகுதியைச் சோ்ந்த சியாமளா, நல்லம்பலைச் சோ்ந்த கேசவன் ஆகிய மூவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக, புதுவை முதல்வா் நிவாரண நிதியிலிருந்து உதவி செய்ய, புதுவை சட்டப்பேரவை நியமன உறுப்பினா் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் முதல்வரிடம் கோரியிருந்தாா்.
அதன்படி, தலா ரூ.20 ஆயிரம் மூவருக்கும் ஒதுக்கப்பட்டு, அதற்கான காசோலையை பயனாளிகளிடம் பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை வழங்கினாா்.

