காரைக்கால்
வாரச் சந்தை தற்காலிக இடமாற்றம்
மழையால் காரைக்கால் வாரச் சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் வாரச் சந்தை நடைபெறும் நகராட்சித் திடலில், மழைநீா் தேங்கி மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக புகாா் எழுந்தது. தற்காலிகமாக சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற பல்வேறு தரப்பினா் வலியுறுத்தி வந்தனா்.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
பருவ மழையால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, வரும் 21-ஆம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) அதைத்தொடா்ந்து நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை திருநள்ளாறு சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
