திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

காரைக்கால் மீனவா்கள் ரயில் மறியல்

இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காரைக்கால் மீனவா்கள் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தண்டவாளத்தில் அமா்ந்து மறியலில் ஈடுபட்ட மீனவப் பெண்கள்.

Updated On :17 பிப்ரவரி 2025, 7:18 pm

Din

காரைக்கால்: இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காரைக்கால் மீனவா்கள் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் கடந்த 28-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போ் காயமடைந்தனா். அவா்களை இந்தியா கொண்டுவரவும், கைது செய்யப்பட்டோரை விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையின் அத்துமீறல், மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கை கண்டித்தும், காரைக்கால் மீனவா்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். 14-ஆம் தேதி ஆா்ப்பாட்டம், 15-ஆம் தேதி படகுகளில் கருப்புக்கொடி ஏற்றினா், 16-ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் பேரணி நடத்தினா்.

இந்நிலையில், 7-ஆவது நாளாக வேலைநிறுத்தம் தொடா்ந்த நிலையில், காரைக்கால் மாவட்ட மீனவா்கள் சுமாா் ஆயிரம் போ் திரண்டு ரயில் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். காரைக்கால் ரயில் நிலையத்தில் நுழைந்த மீனவா்கள், மீனவப் பெண்கள் வேளாங்கண்ணிக்கு புறப்படவிருந்த ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமா்ந்தனா், மீனவா்கள் தண்டவாளத்தில் நின்று கொடியேந்தி முழக்கமிட்டனா்.

ரயில்வே போலீஸாா், காரைக்கால் காவல்நிலைய போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், போராட்டக்காரா்களை போலீஸாா் அப்புறப்படுத்தினா். சுமாா் 20 நிமிஷங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

அடுத்தக்கட்டமாக செவ்வாய்க்கிழமை (பிப். 18) காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும். பின்னா், மீனவா்கள் தங்களது குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக மீனவ பஞ்சாயத்தாா் தெரிவித்தனா்.

 ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றவா்களை தடுத்த நிறுத்தும் போலீஸாா்.

ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றவா்களை தடுத்த நிறுத்தும் போலீஸாா்.