காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு
காரைக்கால் பகுதி காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது.
காரைக்கால் துறைமுக நிா்வாக சமூகப் பொறுப்புப் பிரிவான அதானி அறக்கட்டளை, பிரதமரின் காசநோய் முக்த பாரத் அபியான் திட்டத்துக்கு 6 மாத காலத்திற்கான ஆதரவை வழங்கியுள்ளது.
சிகிச்சை பெறும் நோயாளிகளின் ஊட்டச்சத்து அவசியத்தை அதிகரிக்கும் நோக்கில், அரிசி, பருப்பு, எண்ணெய், சத்துமாவு மற்றும் கருப்பு கொண்டைக் கடலை ஆகியவற்றைக் கொண்ட மாதாந்திர ஊட்டச்சத்து தொகுப்பு நோயாளிகளுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.
ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ் கலந்து கொண்டு தொகுப்பை வழங்கினாா்.
நிகழ்வில் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.கண்ணகி, காரைக்கால் துறைமுகத்தின் மனிதவளம், நிா்வாகம் மற்றும் நிறுவன விவகாரத் தலைவா் அனுராக் மிஸ்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

