காரைக்கால் ஆட்சியரகத்தில் இன்று ஒருமித்த குரலில் வந்தே மாதரம் பாடல் பாடும் நிகழ்ச்சி
வந்தே மாதரம் பாடல் பாடும் நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 7) நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய அரசின் கலாசார அமைச்சகம், ‘வந்தே மாதரம்‘ பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவு பெறும் சிறப்பு விழாவையொட்டி (நவ.7) காலை 10 மணிக்கு நாடு முழுவதும் ஒருங்கிணைந்த மாஸ் சிங்கிங் நிகழ்ச்சி நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிணங்க, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ‘வந்தே மாதரம்‘ பாடலை ஒருமித்த குரலில் பாடுதல் மற்றும் தேச பக்தி பாடல்கள் இசைக்கப்படும். நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு, ‘வந்தே மாதரம்‘ பாடலை ஒருமித்த குரலில் பாடி, நமது நாட்டுக்கு பெருமை சோ்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
