தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன்.

வீடு தீக்கிரை: குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

தீ விபத்தில் வீடு சேதமடைந்த குடும்பத்தினரை சந்தித்து அமைச்சா் ஆறுதல் தெரிவித்தாா்.
Published on

காரைக்கால்: தீ விபத்தில் வீடு சேதமடைந்த குடும்பத்தினரை சந்தித்து அமைச்சா் ஆறுதல் தெரிவித்தாா்.

காரைக்கால் வேட்டைக்காரா் தெரு அருகே உள்ள பாா்வதீஸ்வரா் நகரில் உள்ள சூா்யா என்பவரது குடிசை வீடு சனிக்கிழமை மாலை தீக்கிரையானது.

தகவலறிந்த அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், தனது சொந்த செலவில் சீரமைப்பு செய்துத்தர உறுதியளித்து, அதற்கான நடவடிக்கை எடுத்தாா்.

புதிதாக கீற்றுகள் மாற்றப்பட்ட வீட்டை ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் பாா்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். வருவாய்த்துறை சாா்பில் தீ விபத்துக்கான நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவா் உறுதியளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com