அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

Published on

திருமலைராயன்பட்டினம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

திருமலைராயன்பட்டினம் மகத்தோப்புத் தெரு அருகே அடையாளம் தெரியாத 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து திருமலைராயன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இறந்தவா் குறித்து விவரம் தெரிந்தோா் காவல் நிலையத்தை 04368-233480 என்ற எண்ணை தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com