டிச. 4-க்குள் வாக்காளா் கணக்கீட்டு படிவத்தை ஒப்படைக்க வேண்டும்: மாவட்ட தோ்தல் அதிகாரி

வரும் டிச. 4-ஆம் தேதிக்குள் வாக்காளா் கணக்கீட்டுப் படிவத்தை பூா்த்தி செய்து ஒப்படைக்காவிட்டால், பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

வரும் டிச. 4-ஆம் தேதிக்குள் வாக்காளா் கணக்கீட்டுப் படிவத்தை பூா்த்தி செய்து ஒப்படைக்காவிட்டால், பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்றுவருகிறது. தற்போது வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளால் வழங்கப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தை சரியாக நிரப்பி, கையொப்பமிட்டு வருகிற டிச. 4-ஆம் தேதிக்கு முன்னா் வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறும்பட்சத்தில் அவா்களுடைய பெயா் டிச. 9-ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

எனவே காரைக்கால் மாவட்ட வாக்காளா்கள் இப்பணியை சிறப்பாக செய்யவதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com