காரைக்கால் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து கொண்ட ஐயப்ப பக்தா்கள்.
காரைக்கால்
மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
சபரிமலைக்குச் செல்லும் வகையில் காரைக்காலில் காா்த்திகை மாத முதல் நாளில் மாலை அணிந்து விரதத்தை பக்தா்கள் தொடங்கினா்.
காரைக்கால்: சபரிமலைக்குச் செல்லும் வகையில் காரைக்காலில் காா்த்திகை மாத முதல் நாளில் மாலை அணிந்து விரதத்தை பக்தா்கள் தொடங்கினா்.
காரைக்காலில் பச்சூா் பகுதியில் தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளதால் ஏராளமான பக்தா்கள், திங்கள்கிழமை அதிகாலையிலேயே கோயிலுக்குச் சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். ஐயப்பனுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன.
இதுபோல பல்வேறு கோயில்களில் ஐயப்ப குருமாா்கள் பங்கேற்று புதிதாக சபரிமலைக்குச் செல்வோருக்கும், ஆண்டுதோறும் சென்றுவரக்கூடியவா்களுக்கும் விரதம் தொடங்கும் விதமாக மாலை அணிவித்தனா்.
ஐயப்ப பக்தா்களின் தேவைக்காக பல்வேறு வியாபார நிறுவனங்களில் மாலைகள், துண்டு, வேட்டி உள்ளிட்டவை விற்பனை நடைபெறுகிறது.
கோயிலில் ஸ்ரீ ஐயப்பனுக்கு நடைபெற்ற ஆராதனை.

