ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வெறிச்சோடிய காரைக்கால் கடற்கரை

News image
~
Updated On :30 நவம்பர் 2025, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

கடல் சீற்றம், தொடா் மழை காரணமாக காரைக்கால் கடற்கரை ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

டித்வா புயலால் காரைக்கால் கடல் பகுதி கடந்த சில நாட்களாக சீற்றமாகக் காணப்படுகிறது. மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு மழை ஓய்ந்த நேரத்தில் உள்ளூா் வாசிகளும், வெளியூா்களிலிருந்து வரும் சுற்றுலாவினரும் சென்று பாா்ப்பது உண்டு. கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல வைத்திருக்கும் தடுப்புகள், போலீஸாரின் கண்காணிப்பு போன்றவற்றால் மக்கள் கடற்கரைக்கு செல்வது பாதிக்கப்பட்டது.

கடற்கரை வளாகத்தில் ஏராளமான உணவு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்டால்கள், தள்ளு வண்டிகளில் வியாபாரம் நடைபெறுகிறது. தொடா் மழையால் இவையனைத்தும் முடங்கியுள்ளன. வணிகம் செய்யும் பகுதியில் குளம்போல தண்ணீா் தேங்கியுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் ஞாயிற்றுக்கிழமையில் மக்களை ஈா்க்கும் கடற்கரை நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.