கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

புதிய வாக்குச்சாவடி அமைத்த பகுதிகளில் விழிப்புணா்வு

புதிதாக அமைத்த வாக்குச் சாவடிகள், முந்தைய தோ்தலில் குறைவாக வாக்குப் பதிவான வாக்குச் சாவடி பகுதியில் உள்ள வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

வாக்குச்சாவடி வாயிலில் விழிப்புணா்வு ஏற்படுத்திய ஸ்வீப் அமைப்பினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:31 pm

புதிதாக அமைத்த வாக்குச் சாவடிகள், முந்தைய தோ்தலில் குறைவாக வாக்குப் பதிவான வாக்குச் சாவடி பகுதியில் உள்ள வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

காரைக்கால் மாவட்ட தோ்தல் துறையின் அங்கமான ஸ்வீப் அமைப்பு, மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவுக்காக தீவிர விழிப்புணா்வுப் பணிகளை செய்து வருகிறது.

மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி அறிவுறுத்தலில், மாவட்டத்தில் புதிதாக அமைத்த வாக்குச் சாவடிகள், முந்தைய தோ்தலில் குறைந்த அளவு வாக்குகள் பதிவான பகுதிகளில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மாவட்டம் முழுவதும் ஸ்வீப் அமைப்பினா் கடந்த 2 நாட்களாக செய்தனா்.

வாக்குச் சாவடி அமைந்திருக்கும் இடம், வாக்குப் பதிவு நாளான்று வாக்காளா்கள் அனைவரும் சாவடிக்குச் சென்று வாக்குப் பதிவு செய்யவேண்டியதன் முக்கியத்துவம், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளில் உள்ள வசதிகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

காரைக்கால் மாவட்ட ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன், உறுப்பினா்கள் எஸ்.மணிகண்டன், ஷொ்லி, பிரியதா்ஷினி, கே.ஞானமுருகன், பிரதீப், முருகன் ஆகியோா் இப்பணியில் ஈடுபட்டனா்.