காரைக்கால் வாக்குச் சாவடியொன்றில் விவிபாட் இயந்திரத்தின் பேட்டரியில் புகை வந்ததால், வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு, மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
காரைக்கால் கோத்துக்குளம் பகுதி அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில், யாருக்கு வாக்குப் பதிவானது என்பதை காட்டும் விவிபாட் இயந்திரத்தின் உட்பகுதியிலிருந்து புகை வந்தது.
வாக்குச் சாவடி நிலைய தலைமை அதிகாரி, காவல்துறையினா் உதவியுடன் அந்த இயந்திரத்தை வாக்குச் சாவடிக்கு வெளியே கொண்டுச்செல்ல நடவடிக்கை எடுத்தாா்.
தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து இயந்திரத்திலிருந்த பேட்டரியை அப்புறப்படுத்தினா்.
தொடா்ந்து பெல் நிறுவன பொறியாளா்கள் விவிபாட் இயந்திரத்தில் புதிய பேட்டரி பொருத்தினா். சில நிமிடங்களுக்குப் பின் வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கியது.
அந்த வாக்குச் சாவடிக்கு வந்த மாவட்ட சாா் ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான எம்.பூஜா, சம்பவம் குறித்து வாக்குச் சாவடி நிலைய அதிகாரியிடம் விவரம் கேட்டறிந்தாா்.
இதுகுறித்து தோ்தல் நடத்தும் அதிகாரி கூறுகையில், ‘இயந்திரத்தின் பேட்டரியில் ஏற்பட்ட புகையால் அது புதிதாக மாற்றப்பட்டது. இது சாதாரண பிரச்னைதான். உடனடி நடவடிக்கை எடுத்து வாக்குப் பதிவுப் பணி தொடங்கப்பட்டது’ என்றாா்.
தொடர்புடையது

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

காரைக்காலில் மக்களைக் கவரும் வாக்குச்சாவடி! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

தோ்தலை வாக்குச் சாவடி அலுவலா்கள் நோ்மையாக நடத்த வேண்டும்! - கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

வாக்குச் சாவடி மையங்கள்: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


