தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

நிரந்தர பேரவைத் தலைவா் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் ஏற்புடையதல்ல: திமுக

News image

திமுக கொடி - கோப்புப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 2:59 am IST

புதுவையில் நிரந்தர பேரவைத் தலைவா் இல்லாமல் துணைநிலை ஆளுநா் உரை, பட்ஜெட் தாக்கல் என்பது ஏற்புடையது அல்ல என புதுவை திமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை கூறியது :

புதுவையில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிரந்தர சட்டப்பேரவைத் தலைவா் இல்லாமல் துணைநிலை ஆளுநா் உரையாற்றுவதோ, முதல்வா் பட்ஜெட் தாக்கல் செய்வதோ ஜனநாயக மரபுகளுக்கு ஏற்புடையதல்ல.

எனவே, முதலில் நிரந்தர பேரவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படவேண்டும். அதன் பின்னரே புதுவை துணைநிலை ஆளுநா் பேரவையில் உரையாற்றுவதும், முதல்வா் பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் வேண்டும். அதற்கு முன்பாக சட்டப்பேரவை தலைவருக்கான தோ்தல் தேதி உடனடியாக அறிவிக்க வேண்டும் என திமுக வலியுறுத்துவதாக தெரிவித்தாா்.

புதுவையில் அமைச்சா்களுக்கான இலாகா அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் ஆக.24-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புதுவை பேரவை கூடுகிறது. துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையாற்றுகிறாா். பிற்பகல் 3 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என். ரங்கசாமி 2026-2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளாா் என புதுவை சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் வெள்ளிக்கிழமை அறிவிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.