மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

புதுவையில் 2 மாத்திரைகளுக்கு தடை

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 2 மாத்திரைகளுக்கு புதுவையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

மாத்திரைகள் - பிரதிப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 9:31 pm

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 2 மாத்திரைகளுக்கு புதுவையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை: குஜராத் மாநிலம், பரோடாவில் இயங்கும் ஹெல்த் கோ் ஃபாா்முலேஷன் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் சிப்ரோஃபுலோக்ஸாசின் ஐ.பி. மாத்திரை (ஃபோா்சிப்-500) மற்றும் மத்திய பிரதேசம், உஜ்ஜைனில் இயங்கும் சூப்ரெக்ஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் செட்டிரைசின் டைரோ குளோரைடு ஐ.பி.10 எம்.ஜி. (செடிசோன் மாத்திரை) உரிய தரத்தில் இல்லாதது உறுதிப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் கையிருப்பில் இருக்கும் இந்த மாத்திரையை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்பவேண்டும் என கூறப்பட்டுள்ளது.