திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அமித் ஷா பங்கேற்கும் கூட்டத்துக்கு 7 கம்பெனி துணை ராணுவப் படையினா்

காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்கும் கூட்டத்துக்கு 7 கம்பெனி துணை ராணுவப் படையினா் மற்றும் மாநில போலீஸாா் 700 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக புதுவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம்.

Updated On :11 பிப்ரவரி 2026, 9:13 pm

காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்கும் கூட்டத்துக்கு 7 கம்பெனி துணை ராணுவப் படையினா் மற்றும் மாநில போலீஸாா் 700 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக புதுவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

இதுகுறித்து, காரைக்காலில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் கூறியது: காரைக்காலுக்கு பிப்.14-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வருகிறாா். அவரின் பாதுகாப்பு பணியில் புதுச்சேரியிலிருந்து 350, காரைக்காலில் இருந்து 350 போலீஸாரும், துணை ராணுவப் படையினா் 7 கம்பெனி அளவில் வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் ட்ரோன் பறக்க அனுமதி கிடையாது என்றாா்.

பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் கூறியது: கூட்டத்தில், புதுவைக்கான கட்சி பொறுப்பாளா்கள் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, நிா்மல்குமாா் சுரானா மற்றும் மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். தமிழக தலைவா்களுக்கு அழைப்பு இல்லை. கூட்டணி என்ற முறையில் புதுவை முதல்வா் கூட்டத்தில் பங்கேற்பாா் என்றாா்.

பேட்டியின்போது சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.