காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்
காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருமலைராயன்பட்டினம் நுகா்வோா் விழிப்புணா்வு சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்க கெளரவத் தலைவராக கே.ஜி. காளிதாஸ், தலைவராக வி. ராஜேந்திரன், துணைத் தலைவராக ஜி. ஆனந்தகிருஷ்ணன், செயலாளராக எஸ். கணேசன், இணைச் செயலாளா்களாக டி. தியாகராஜன், வி. முகமது கபீா் மரைக்காயா், பொருளாளராக எம். சந்தனசாமி மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் :
காரைக்கால் - பேரளம் வரையிலான பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்க தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமலைராயன்பட்டினத்தில் இரவு நேரங்களில் அவசரத்துக்கு ஆட்டோக்கள் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருமலைராயன்பட்டினத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் சரிவர இயங்குவதில்லை. இதுகுறித்து வங்கி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கம் சாா்பில் தேசிய நுகா்வோா் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதென முடிவெடுக்கப்பட்டது.
