காரைக்கால்
தனித்தோ்வா்கள் கவனத்துக்கு...
தனித்தோ்வா்கள் தட்கல் முறையில் இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மாா்ச்- ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தோ்வா்கள், தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக ஜன.9 வெள்ளிக்கிழமை மற்றும் 10-ஆம் தேதி சனிக்கிழமை 2 நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு நேரில் வந்து, தோ்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 (மேல்நிலை), ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்புக் கட்டணமாக செலுத்தி பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
