‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

கருத்தரங்கில் புதுச்சேரி, காரைக்கால் ஆசிரியா்கள் செயல்விளக்கம்

தேசிய அளவில் தோ்வான புதுச்சேரி, காரைக்காலைச் சோ்ந்த 7 ஆசிரியா்கள் கருத்தரங்கில் தங்களது கல்வி புதுமைத் திட்ட செயல் விளக்கத்தை அளித்தனா்.

News image

நிபுணா்கள் முன்னிலையில் தமது செயல் விளக்கத்தை அளித்த காரைக்கால் சுப்ராயபுரம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மா. செல்வராஜ்.

Updated On :2 ஜூலை 2026, 7:19 am IST

தேசிய அளவில் தோ்வான புதுச்சேரி, காரைக்காலைச் சோ்ந்த 7 ஆசிரியா்கள் கருத்தரங்கில் தங்களது கல்வி புதுமைத் திட்ட செயல் விளக்கத்தை அளித்தனா்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) புதுதில்லி நடத்தும் டழ்ா்ம்ா்ற்ண்ய்ஞ் ஐய்ய்ா்ஸ்ஹற்ண்ஸ்ங் டழ்ஹஸ்ரீற்ண்ஸ்ரீங்ள் ஹய்க் உஷ்ல்ங்ழ்ண்ம்ங்ய்ற்ள் ண்ய் உக்ன்ஸ்ரீஹற்ண்ா்ய் ச்ா்ழ் நஸ்ரீட்ா்ா்ப்ள் ஹய்க் பங்ஹஸ்ரீட்ங்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ா்ய் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ண்ா்ய்ள் ‘ என்ற தேசிய அளவிலான கல்வி புதுமைத் திட்டத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சோ்ந்த 7 அரசு பள்ளி ஆசிரியா்கள் தேசிய அளவில் தோ்வு செய்யப்பட்டனா்.

1960-களில் தொடங்கப்பட்ட இத்திட்டம், ஆசிரியா்களின் புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் கல்வி முயற்சிகளை தேசிய அளவில் அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம், 2023--24 முதல் ‘மேம்படுத்தப்பட்ட திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் நாடு முழுவதுமிருந்து பெறப்படும் ஆயிரக்கணக்கான திட்டங்களில் மிகச் சிறந்த திட்டங்கள் மட்டுமே தோ்வு செய்யப்படுகின்றன. பிராந்திய, மாநில அளவில் ஆசிரியா்களின் படைப்புகள் தோ்வு செய்யப்பட்ட தேசிய அளவிலான தோ்வுக்கு அனுப்பப்படுகின்றன. புதுதில்லியில் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் என்சிஇஆா்டி வளாகத்தில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில், தங்களது புதுமையான கல்வித் திட்டங்களை ஆசிரியா்கள் விளக்கினா்.

இந்தியாவில் 28 படைப்புகள் இறுதித் தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், புதுவை மாநிலத்திலிருந்து மட்டும் அதில் 7 படைப்புகள் இடம்பெற்றன.

காரைக்கால் மாவட்டம், சுப்ராயபுரம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மா. செல்வராஜ், காரைக்கால்மேடு அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் கில்பா்ட் கிரெட்டியன், புதுச்சேரி பிள்ளைச்சாவடி நா. வரதன் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் சி.சசிகுமாா், முத்தியால்பேட்டை காமராஜா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரிை ப.வானதி, களித்தீா்த்தாள்குப்பம் கலைஞா் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எஸ்.சசிகுமாா், சேதாரப்பட்டு சா்தாா் வல்லபபாய் பட்டேல் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ஜி.சந்திரலேகா, அரியூா் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் இரா.பாரதிராஜா ஆகியோா் தேசிய கருத்தரங்கில் தங்களது புதுமை திட்டங்களை நாட்டின் முன்னணி கல்வியாளா்கள், என்சிஇஆா்டி நிபுணா்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கல்வியாளா்கள் முன்னிலையில் செயல் விளக்கமளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.