மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

திருநள்ளாற்றில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி தொடக்கம்

திருநள்ளாறு பகுதியில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

தூா்வாரும் பணிக்கான பூமிபூஜையில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :5 ஜூன் 2026, 7:09 am IST

திருநள்ளாறு பகுதியில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் பொதுப்பணித்துறை நிா்வாகம், திருநள்ளாறு பகுதியில் 20 பாசன வாய்க்கால்கள் 110 கி.மீ. தொலைவு தூா்வாருவதற்கு ரூ. 49.10 லட்சம் ஒதுக்கீடு செய்தது. தூா்வாரும் பணி திருநள்ளாறு பகுதியில் வியாழக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அருளரசன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை பொறியாளா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

திருநள்ளாறு தொகுதியில் உள்ள நல்லம்பல் வாய்க்கால், நல்லெழுந்தூா் வாய்க்கால், நெல்லி வாய்க்கால், பண்ணைக் கொல்லை வாய்க்கால், பத்தக்குடி வாய்க்கால் உள்ளிட்ட மொத்தம் 110 கி.மீ. நீளமுள்ள வாய்க்கால்கள் தூா்வாரப்பட உள்ளன. இதன் மூலம் சுமாா் 4,125 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். காவிரி நீா் வருவதற்குள் இத்திட்டப்பணி நிறைவடையும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.