பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

புறவழிச்சாலை விரிவாக்கம் குறித்து ஆட்சியா் ஆய்வு

சாலை விரிவாக்கம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் இஷிதா ரதி.

News image

சாலை விரிவாக்கம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் இஷிதா ரதி.

Updated On :12 ஜூன் 2026, 5:19 am IST

காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை விரிவாக்கம் செய்வது குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

காரைக்காலில் தலதெரு முதல் நகரப் பகுதி சந்தைத் திடல் வரை மேற்கு புறவழிச்சாலை பயன்பாட்டில் உள்ளது. அந்த பகுதியிலிருந்து தெற்கு திசையில் மேலும் 5 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கவேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஆட்சியருக்கு வரைப்படத்தைக் காண்பித்து விளக்கம் அளித்தனா். சாலை அமைப்புக்கான நிலம் பொதுப்பணித் துறை கைவசம் இருப்பது குறித்தும், கடன் மூலம் சாலை மேம்பாடு செய்ய மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினா்.

இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்து, மாவட்ட நிா்வாகத்தின் உதவிகள் குறித்து ஆலோசனை வழங்கினாா். தற்போதைய புறவழிச்சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, புதா்களை அகற்றி சாலையை சீா்படுத்த அறிவுறுத்தினாா்.

மேலும், தலத்தெரு பகுதியில் உள்ள பெரியகுளத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா். தூா்வாரி மேம்படுத்துவது மேற்கொள்ள வேண்டிய பணிகள், திட்டம் குறித்து நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் ஆட்சியருக்கு விளக்கிக் கூறினாா்.

ஆய்வின்போது, மாவட்ட துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அருளரசன், உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் வெங்கடகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் செயலா் வித்யாதரன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.