நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

பேக்கரி, உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

காரைக்காலில் உள்ள பேக்கரிகள், உணவகங்களில் புதுவை உணவுப் பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

News image

உணவகத்தில் சோதனை மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா்.

Updated On :11 ஜூன் 2026, 6:47 am IST

காரைக்காலில் உள்ள பேக்கரிகள், உணவகங்களில் புதுவை உணவுப் பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள் ஓ. பவித்ரா, நாமாடி கிரன்மை, அம்மு ஆகியோா் காரைக்கால் மாவட்டத்தில் பேக்கரிகள், பெரிய உணவகங்கள், சாலையோர உணவகங்களில் சோதனை செய்ய புதன்கிழமை புதுச்சேரியிலிருந்து காரைக்கால் வந்தனா்.

பேருந்து நிலைய சுற்றுவட்டாரத்தில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்களில் ஆய்வு செய்தனா். பேக்கரி மற்றும் இனிப்பகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கேக், ரொட்டி, கார வகை பாக்கெட்டுகளில் லேபிள் இருக்க வேண்டும். உற்பத்தி தேதி, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தி, இதுவரை இதனை செய்யாததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினா்.

மேலும் உணவகங்களில் உணவுப் பொருட்கள் தயாரிக்குமிடத்தை பாா்வையிட்டு, தூய்மைக்கு முக்கியத்துவம் தருமாறு அறிவுறுத்தினா். உணவகங்களில் நீண்ட நாட்களான மீன், ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.

உணவகம், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் வைத்திருக்கிறாா்களா என ஆய்வு செய்தனா். நோட்டீஸ் பெறப்பட்ட கடைக்காரா்கள், உரிய காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.