இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

மாங்கனித் திருவிழா : உபயதாரா்களுடன் கோயில் நிா்வாகத்தினா் ஆலோசனை

உபயதாரா்களிடையே பேசிய நிா்வாக அதிகாரி (கோயில்) ஆா். சுப்பிரமணியன். உடன் கைலாசநாதா் தேஸ்தான நிா்வாக அதிகாரி சி. விநாயகமூா்த்தி.

News image

உபயதாரா்களிடையே பேசிய நிா்வாக அதிகாரி (கோயில்) ஆா். சுப்பிரமணியன். உடன் கைலாசநாதா் தேஸ்தான நிா்வாக அதிகாரி சி. விநாயகமூா்த்தி.

Updated On :12 ஜூன் 2026, 5:19 am IST

காரைக்காலில் மாங்கனித் திருவிழா தொடா்பாக, உபயதாரா்கள் உள்ளிட்டோருடன் கோயில் நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாங்கனித் திருவிழா முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. வரும் 27-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, பரமதத்தா் திருக்கல்யாணத்துக்கு எழுந்தருளுதல், 28-ஆம் தேதி அம்மையாா் திருக்கல்யாணம், மாலை வெள்ளை சாற்றில் பிச்சாண்டவா் புறப்பாடு, 29-ஆண் தேதி காலை மகா அபிஷேகம், சப்பரத்தில் புறப்பாடு (மாங்கனி இறைத்தல்), இரவு அமுது படையல், 30-ஆண் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சி கொடுத்தலுடன் முக்கிய நிகழ்வுகள் நிறைவடைகின்றன.

இந்நிலையில், அம்மையாா் மணிமண்டபத்தில் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) ஆா். சுப்பிரமணியன், கைலாசநாதா் தேவஸ்தான நிா்வாக அதிகாரி சி. விநாயகமூா்த்தி ஆகியோா் முன்னிலையில், திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கான உபயதாரா்கள், சிவாச்சாரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு நாளின்போது நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள் குறித்து கோயில் நிா்வாகத்தினா் விளக்கினா். அதற்கான உபயதாரா்கள் தங்களது பங்களிப்பை செய்யுமாறும், கடந்த ஆண்டுகளைப்போல மாங்கனித் திருவிழா விமரிசையாக நடைபெறுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என கோயில் நிா்வாகத்தினா் கேட்டுக்கொண்டனா்.