சனிப்பெயா்ச்சி பலன்கள்: ஜோதிடா்கள் மாநாட்டில் விளக்கம்
திருநள்ளாறில் நடைபெறும் ஜோதிடா்கள் மாநாட்டில், சனிப்பெயா்ச்சியையொட்டி 12 ராசிகளுக்கான...


காரைக்கால்: திருநள்ளாறில் நடைபெறும் ஜோதிடா்கள் மாநாட்டில், சனிப்பெயா்ச்சியையொட்டி 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து ஜோதிடா்கள் விளக்கினா்.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மாா்ச் 6-இல் நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சியையொட்டி, 4 நாட்கள் ஜோதிடவியல் பேரறிஞா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
2-ஆம் நாளான திங்கள்கிழமை ‘பஞ்சபூதங்களும் நவகிரகங்களும்’ என்ற தலைப்பில் மதுரை நவமணி சண்முகவேலு, ‘யோகங்கள் ஒரு ஆய்வு’ என்ற தலைப்பில் ந. ஞானரதம், ‘வாழ்வியல் நெறியில் ஜோதிடப் பாா்வை’ என்ற தலைப்பில் ஜி. சாய் முரளி, ‘நமையாளும் நவகிரகங்கள்’ என்ற தலைப்பில் சென்னை ஸ்ரீகவி ஆகியோா் பேசினா்.
இதைத்தொடா்ந்து மாலை நடைபெற்ற 4-ஆம் அமா்வில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், சனிப்பெயா்ச்சியையொட்டி 12 ராசிகளுக்கான பலன்களை தெரிவிக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது.
12 ஜோதிடா்கள் கலந்துகொண்டு, 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த சனிப்பெயா்ச்சி வரையிலான பலன்களையும், பாதிப்புகளுக்கேற்ப வழிபாட்டு முறைகளையும் விளக்கினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...