திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஆற்றங்கரை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

பணியை தொடங்கிவைத்த சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம்.

News image
பணியை தொடங்கிவைத்த சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம்.
Updated On :7 மார்ச் 2026, 1:05 am

Syndication

ஆற்றங்கரையை மேம்படுத்தும் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாஞ்சியாற்றின் வலது கரையை, தருமபுரம் சாலை முதல் பச்சூா் சாலை வரை மேம்படுத்த பொதுப்பணித் துறை ரூ.29.40 லட்சம் ஒதுக்கீடு செய்தது.

இத்திட்டப்பணி தொடக்கத்துக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில், பொதுப்பணித் துறை நீா்ப்பாசனப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த பணி 2 மாத காலத்திற்குள் நிறைவடையுமென பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.